
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உண்மையே நான் அறிந்த கடவுள். அவரை தரிசிப்பதற்கான சாதனம் அகிம்சை ஒன்றே. வாய்மையும், அகிம்சையும் இமயமலை போல என்றும் நிலைத்திருக்கும்.
* தன்னடக்கம் இல்லாதவன் எவ்வளவு படித்தும் பயனில்லை. தலைமைப் பண்பை விரும்பும் அனைவரும் அடக்கத்தை முதலில் பின்பற்ற வேண்டும்.
* சொர்க்கத்தை விரும்பியோ, நரகத்திற்கு பயந்தோ செய்வது தர்மம் ஆகாது. தர்மம் தர்மத்திற்காகவே செய்வதாகும்.
* அறிவுள்ளவன் ஆத்திரப்பட விரும்ப மாட்டான். அசையாத அமைதியே அறிவின் வெளிப்பாடு.
* எதிர்பார்ப்பு இல்லாமல் வெளிப்படுத்தும் அன்பே உயர்வானது. கைமாறு கருதும் அன்பு வியாபாரம் போன்றது.
* அறிவை விட உயர்ந்தது இதயம். இதயத்தைப் பயன்படுத்தி அதில் அன்பை வளர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்.
- காந்திஜி